×

வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ட்ராங் ரூமை தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும்

தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, தினமும் 5 முறை காவல்துறை அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும், தனித்தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதை தொடர்ந்து ஆயுதப்படை போலீசாரும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ட்ராங் ரூமில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, 24 மணிநேரம் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி குறைந்தபட்சம் தினசரி 5 முறையாவது, சோதனை நடத்த வேண்டும் என்று போலீஸ் உயர்அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வாக்கு எண்ணும் மையத்தில், தினமும் 5 முறையாவது வெவ்வேறு காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி சீல் வைத்த ஸ்ட்ராங் ரூமை பூட்டிய சீல் சேதமடைந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா காட்சிகள் சரியாக இருக்கிறதா, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீசார் தங்களது பணிகளை சரியாக செய்கிறீர்களா என்றும் காவல்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்,’ என்றார்.

Tags : Strong Room ,
× RELATED கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்...