×

ஓசூரில் குப்பைத் தொட்டி வைக்க கோரிக்கை

ஓசூர், ஏப்.8: ஓசூர் பாரதிதாசன் நகரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் தெருவோரங்களில் குப்பைகளை வீசிச் செல்கின்றனர். இதனை அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்கள், பன்றிகள் பொதுமக்கள் வீசி செல்லும் குப்பைகளை கிளறி விட்டும், அவற்றை கவ்வி சென்று சாலையில் போட்டு செல்வதால், கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, இப்பகுதியில் குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Hosur ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்