×

திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது

திருப்பூர், ஏப். 8: திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரத்தை நேற்று வாக்கு எண்ணிக்கை மையமான எல்ஆர்ஜி மகளிர் கல்லூரில் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் (தனி) காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3343 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணும் மையமான  திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான விஜயகார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ரவிசங்கர பிரசாத், சந்தர் பிரகாஷ் வர்மா, உமா நந்தா டோலி, மாஷீர் ஆலம், கபில்மீனா மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் சீல் ைவக்கப்பட்டது.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தினை சுற்றி மத்திய காவல் படையினர் மற்றும் போலீசார் 24 மணிநேர பாதுகாப்பும் மற்றும் சி.சி.டிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட எஸ்பி திஷாமிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...