தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறீங்க? விஜயபிரபாகரன் கேள்வி

பெரம்பலூர்,ஏப்.4: தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறீங்க என்று விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.பெரம்பலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது: தேர்தலுக்கு முன்னாடி எல்லா கட்சிக்காரங்களுமே தேமுதிக கட்சியை பார்த்து ஏளமான பேசினாங்க, 234 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்த முடியாமா என்றனர். இன்னைக்கு 60 தொகுதியிலும் சொந்த தொகுதியை சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது தேமுதிக மட்டும் தான். மக்கள் முன்னாடி ஒரு மாற்றம் வேண்டும் என இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். விஜயகாந்த், தினகரன் ஆகியோர் சுயமாக கட்சி ஆரம்பிச்சு சொந்த காசை மக்களுக்கு செலவு செய்து வருகின்றனர். யாராவது ஒருவர் சொல்லுங்க விஜயகாந்தும், தேமுதிகவும் இந்த மக்களுக்கு என்ன துரோகம் செய்தது. மக்களே சொல்லுங்க? என்ன தவறு செய்தோம், நீங்களே சொல்லுங்க. தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்கமாட்டேங்கிறீங்க? எல்லா இடத்திலும் திறமைசாலிக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் திறமைசாலிக்கு வாய்ப்பு தரமாட்டேங்குறிங்க, ஏன் என்றால் 100க்கும், சோருக்கும், பீருக்கும் உங்கள் ஓட்டை விற்றால் நிச்சயம் ஊழல்தான் நடக்கும்.

Related Stories:

More
>