×

நான் படிச்ச இளைஞன் வாய்ப்பு தேடி அலையுறேன்

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், அருப்புக்கோட்டையில் நேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘விருதுநகர் தொகுதி எனது சொந்த தொகுதி. சொந்த தொகுதியில் வேட்பாளராக நிற்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம்தான் எனது தாத்தா, எனது அப்பா பிறந்த ஊர். நான் படித்த இளைஞன். வாய்ப்பு தேடி அலைஞ்சுகிட்டு இருக்கேன். வாய்ப்பு கொடுத்தால் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன்’’ என்றார்.

The post நான் படிச்ச இளைஞன் வாய்ப்பு தேடி அலையுறேன் appeared first on Dinakaran.

Tags : Vijayaprabhakaran ,DMD ,Virudhunagar ,Arupukottai ,Virudu Nagar ,Ramanujapuram ,Aruppukkottai ,
× RELATED அண்ணன் ஜெயிச்சா உங்கள தங்கத்தட்டுல...