×

வாட்டி வதைக்கும் வெயில் மாநகரில் 106 டிகிரி பதிவு

ஈரோடு,ஏப்.2: ஈரோடு மாவட்டத்தில் நேற்று 106 டிகிரி வெயில் பதிவான நிலையில் அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக ஒரு வாரகாலத்திற்கு இயல்பை விட வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் மற்றும் அனல் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்தை விட கடுமையான வெயில் நிலவி வருகின்றது. நேற்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வெயில் சுட்டெரித்தது. மதிய நேரத்தில் அனல் காற்றும் லேசாக வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் பரிதவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 106 டிகிரி வரை வெயில் காணப்பட்டது. இன்னும் நான்கு நாட்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Vail ,
× RELATED நெல்லை டவுன் வயல் தெரு பகுதியில்...