வேலூர் அருகே சிறுமியை கடத்திய கூலிதொழிலாளி போக்சோவில் கைது

வேலூர், ஏப்.2:வேலூர் அருகே சிறுமியை கடத்திய கூலிதொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். வேலுார் சேர்ந்தவர் 16வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம்வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், செதுவாலையைச் சேர்ந்தவர் முபாரக் அலி(22) கூலித்தொழிலாளி. இருவருக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முபாரக் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 30ம்தேதி ஆந்திர மாநிலத்துக்கு அவரை கடத்தி சென்றார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் விரிஞ்சிபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் சப்–-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தலைமறைவான முபாரக்யை தேடிவந்தனர். சிறுமிக்கு இன்னும் திருமணம் வயது ஆகவில்லை.

உன்னை போலீசார் தேடுகிறார்கள் என்று நண்பர்கள் மூலமாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயந்துப்போன வாலிபர் நேற்று சிறுமியைஆந்திராவில் இருந்து வேலுாருக்கு அழைத்து வந்தார். தகவலறிந்த போலீசார் பொய்கை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்றுக்கொண்டு இருந்த அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவருடன் இருந்த சிறுமியையும் மீட்டனர். மேலும், இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முபாரக்யை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி பின்னர் வேலுார் மத்தியசிறையில் போலீசார் அடைத்தனர்.

Related Stories:

>