×

பொதுமக்கள் பாராட்டு குரும்பலூர் அரசு கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர், ஏப்.1: குரும்பலூர் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்மையத்தை கலெ க்டருடன் தேர்தல் பார்வை யாளர்கள் கூட்டாய்வு நடத்தினர். நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் மதுரிமாபர்வாசென், காவல் துறை பார்வையாளர் ராஜிவ் ஷ்வரூப் ஆகியோர் நேற்று (31ம்தேதி) பார்வையிட்டு கூட்டாய்வு மேற்கொ ண்டனர்.

6ம் தேதி மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு மையங்களிலிருந்து, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட உள்ளன. மே மாதம் 2ம்தேதி இங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வேட்பாளர் முகவர்கள் சிசிடிவி காட்சிப் பதிவுகளை கொண்டு வாக்குப்பெட்டிகள் இருக்கும் அறைகளைக் கண்காணிக்க உள்ளனர். இதனையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகளை, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்,

அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்குத் தே வையான குடிநீர், மின்சார ம், கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டு வரு வதை கலெக்டர் வெங்கட பிரியாவுடன் தேர்தல் பார்வையாளர்கள் கூட்டாய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, லாடபுரம், எசனை கிராம வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் பத்மஜா, ஊராட்சிகள் உத வி இயக்குநர் பாரதிதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kurumbalur Government College ,
× RELATED குரும்பலூர் அரசு கல்லூரி வாக்கு...