×

திருமானூர் அமமுக ஒன்றிய செயலாளர் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியம் வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார்

அரியலூர், ஏப். 1: அரியலூரில் அமமுக ஒன்றிய செயலாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அமமுகவினர் அரசு தலைமை கொறடாவும், அதிமுக வேட்பாளருமான தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர்.
அரியலூர் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரன் அரியலூர் நகர பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகள், தான் செய்த பணிகள் குறித்து கூறி பிரசாரம் செய்தார். அவருடன் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். மாலை 4 மணி முதல் ராயம்புரம், அயன்ஆத்தூர், கல்லங்குறிச்சி, வாலாஜாநகரம், எருத்துக்காரன் பகுதிகளில் இயக்குநர் ரங்கநாதன் மற்றும் நகைச்சுவை நடிகர் அனுமோகன் ஆகியோர் வேட்பாளர் தாமரை ராஜேந்திரனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், திருமானூர் கிழக்கு ஒன்றிய அமமுக செயலாளர் கோவி.ஜெயப்பிரகாஷ் தலைமையில் அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை.ராஜேந்திரன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு தாமரை ராஜேந்திரன் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அரியலூர் தொகுதியில் வெற்றி பெற பணிபுரியுமாறு கூறினார். உடன் அதிமுக, பாமக, தமாகா, பாஜகவினர் இருந்தனர்.

Tags : Thirumanoor ,AIADMK ,Tamara Rajendran ,Tamara ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி