×

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 13.43 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்

நாகை, ஏப். 1: நாகை அருகே பாப்பாகோவில் கிராமத்தில் பூத் சிலிப் வழங்கும் பணியை கலெக்டர் பிரவீன்பிநாயர் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,24,197 ஆண் வாக்காளர்கள், 1,28,301 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் உள்ளனர்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,21,611 ஆண் வாக்காளர்கள், 1,24,361 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 15 பேர் உள்ளனர். பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,35,930 ஆண் வாக்காளர்கள், 1,39,890 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் உள்ளனர். நாகை சட்டமன்ற தொகுதியில் 95,819 ஆண் வாக்காளர்கள், 1,02,072 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் உள்ளனர். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 87,310 ஆண் வாக்காளர்கள், 91,373 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் உள்ளனர்.

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 94,409 ஆண் வாக்காளர்கள், 98,249 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 6,59,276 ஆண் வாக்காளர்கள், 6,84,246 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 47 பேர் என மொத்தமாக 13,43,569 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும் விடுதல் இன்றி இந்த பூத் சிலிப் வழங்கப்படும் என்றார்.

Tags : Naga, Mayiladuthurai district ,
× RELATED நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் 6...