×

ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கிராமங்களில் தீவிர பிரசாரம்


ராமநாதபுரம், மார்ச் 31:ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமநாதபுரம் தெற்கு நகர் வார்டுகளில் நேற்று முன்தினம் இரவு வாக்கு சேகரித்தார். திமுக நிர்வாகிகள் 100 கிலோ எடை 12 அடி உயர ரோஜா பூ மாலை அணிவித்தனர். திமுக தேர்தல் பணி குழு இணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பன், திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை ஆதரித்து நேற்று தெற்கு மல்லல், உத்தரகோசமங்கை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். மண்டபம் கிழக்கு ஒன்றியம் பிரப்பனவலசை ஊராட்சி தலைவர் கலா உடையார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பவானி ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ரவீந்திரநாத் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம், தவ்பீக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நகர் செயலாளர் கார்மேகம், தெற்கு நகர் பொறுப்பாளர் பிரவின் தங்கம், ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ramanathapuram ,DMK ,Kadarpatsha Muthuramalingam ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...