×

முட்டைகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் திமுக மாவட்ட பொறுப்பாளர் பிரசாரம்


நாமக்கல், மார்ச் 31: நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், நேற்று நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை, இபி காலனி, பெரியூர், தும்மங்குறிச்சி, கிருஷ்ணாபுரம், கருப்பட்டிபாளையம், உத்தமபாளையம், பதிநகர், போதுப்பட்டிகாலனி, மதுரைவீரன்காலனி, அய்யம்பாளையம், மரூர்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, வீசானம், விட்டமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். இவரை ஆதரித்து கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:திமுக ஆட்சி அமைந்து தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்பது மட்டுமே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்த உடன், நாமக்கல் மாவட்டத்தில் லாரி தொழில் மேம்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

முட்டைகளை சேமித்து வைக்க, குளிர்சாதன கிடங்கு அமைத்து கொடுக்கப்படும். அனைத்து மக்களின் எண்ணங்களை எல்லாம் அறிந்து திட்டங்களை செயல்படுத்துவார். வேட்பாளர் ராமலிங்கத்தை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கவேண்டும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150நாள் ஆக விரிவாக்கப்படும். நைனாமலை, பெருமாள் கோயிலுக்குசெல்ல பாதை அமைத்து தரப்படும். இவ்வாறு பேசினார். இந்த பிரசாரத்தின்போது, தேர்தல் பொறுப்பாளர் கைலாசம், மேற்கு நகர பொறுப்பாளர் சிவக்குமார், சட்டதிட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : DMK District ,
× RELATED பரிவாக்கம் சந்திப்பு,...