×

காஞ்சிபுரம் அருகே நிலை கண்காணிப்புக்குழு சோதனையில் ₹1.39 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

காஞ்சிபுரம், மார்ச் 30: காஞ்சிபுரத்தை அடுத்த பெரியார் நகர் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.39 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினனர் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணம், நகை மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதனடிப்படையில் காஞ்சிபுரத்தை அடுத்த பெரியார் நகர் பகுதியில் நேற்று நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி கீதப்பிரியா தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்ற மணப்புரம் தங்க நகை நிறுவனத்தைச் சேர்ந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி சுமார் ரூ.1.39 கோடி மதிப்புள்ள 3.291 கிலோ தங்க நகைகள் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி கோபால் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனயை?ல் உரிய ஆவணங்கள் இன்றி டூ வீலரில் எடுத்துவந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : State Monitoring Committee ,Kanchipura ,
× RELATED காஞ்சி மாவட்டத்தில் மிதமான மழை