×

அவிநாசி தொகுதி திமுக வேட்பாளர் அதியமான் தீவிர பிரசாரம்

அவிநாசி, மார்ச் 30: அவிநாசி(தனி) தொகுதியில் திமுக கூட்டணியின் சா¬ர்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அத¬ியமான் போட்டியி¬டுகிறார். இவர் நேற்று திருமுருகன்பூண்டி ஒன்றியத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் திரண்டு வந்து வேட்பாளர் அதியமானுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தில் அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், திருமுருகன்பூண்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் பழனிசாமி, வட்டார காங்கிரஸ் தலைவர் மணி, சாயிகண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்துசாமி, அவிநாசியப்பன், லோகு, விடுதலைசெல்வன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சியினர் பலர் பங்கேற்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.  திருமுருகன்பூண்டி ஒன்றியத்தில், சமத்துவபுரம், தெக்கலூர்,உப்பிலிபாளையம், கருவலூர், காந்திநகர், வெள்ளாண்டிபாளையம், திம்மனையாம்பாளையம், சூரிபாளையம், நைனான்பாளையம், அரசப்பம்பாளையம், ஜோதிநகர், அண்ணாநகர், கருவலூர், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், அரசப்பம்பாளையம், நம்பியாம்பாளையம், அனந்தகிரி, மருதூர், காளிபாளையம், சுண்டக்காம்பாளையம், எலச்சிபாளையம், நரியம்பள்ளி ஆகிய பகுதிகளில் வேட்பாளர் அதியமான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Avinashi ,DMK ,Adiyaman ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி