காரிமங்கலம் பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு பொதுமக்கள் கடும் அவதிகாரி

மங்கலம், மார்ச் 30: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி, மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும், விவசாயிகள் உரிய நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அறிவிக்கப்படாத மின்வெட்டை நீக்கி, சீரான முறையில் மின் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>