×

முதுகுளத்தூரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி உறுதி

சாயல்குடி, மார்ச் 30:  tமுதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செல்வநாயகபுரம், மணலூர், ஆணைச்சேரி, கீழ் பண்ணைக்குளம், நல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும், முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியிலும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘செல்வநாயகபுரம் ஒருங்கிணைந்த வேளாண் விற்பனை மையத்தில் குளிரூட்டும் மையம் அமைக்கப்படும். மணலூர், கீழபண்ணைக்குளம் பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். செல்வநாயகபுரத்திலிருந்து ஆணைச்சேரி வழியாக மேலக்கொடுமலூர் செல்லும் சாலை புதுப்பிக்கப்படும். கூடுதல் மினி பஸ் இயக்கப்படும். முதுகுளத்தூரில் சரவணபொய்கை பூங்காவுடன் கூடிய நடைபயிற்சி தளம் தரம் உயர்த்தப்படும். முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி வழித்தடத்தில் மதுரைக்கு இரவு நேரம் பஸ்கள் இயக்கப்படும். முதுகுளத்தூர் பேரூராட்சியில் சிப்காட் தொழிற்சாலை, பாலிடெக்னிக் கல்லூரி, புறவழிச்சாலை, பாதாள சாக்கடை திட்டம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்’ என்றார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் தர்மர், முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் சங்கரபாண்டியன், பஞ்சாயத்து தலைவர் கூட்டமைப்பு தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், தூரி மாடசாமி மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Keerthika Muniyasamy ,Mudukulathur ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...