×

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலில் பங்குஉத்திர பிரம்மோற்சவ தீர்த்தவாரி

கும்பகோணம், மார்ச் 29: கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயில் கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் பங்குனி உத்திரபிரம்மோற்சவத்தை முன்னிட்டு மகாமக குளம் மற்றும் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சைவத்தலங்களில் ஒன்றானதும், அப்பர் பெருமானால் பாடல் பெற்றதும், நாகதோஷ பரிகார தலமாகவும் விளங்கும், நாகேஸ்வர சுவாமி கோயில் ஆனந்தநிதி அம்பிகை சமேத ஆதி கம்பட்ட விஸ்வநாதர் கோயில் தூமகேது முனிவரால், நிறுவி வழிபாடு செய்யப்பட்ட பெருமை கொண்டது. இத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பிரமோற்சவம் 13 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா, பஞ்சமூர்த்திகள் மகாமகம் குளத்தில் ரிஷப வாகனங்களில் எழுந்தருள, தொடர்ந்து மகாமக குளத்தில் அஸ்திரதேவருக்கு எண்ணெய், திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர் சந்தனம் என பலவகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் நாதஸ்வர மேளதாளம் முழங்க, 2 அஸ்திர தேவர்களுடன் சிவாச்சாரியார்கள் மகாமககுளத்தில் ஒரே சமயத்தில் இறங்கி, குளத்து நீரில் மும்முறை முங்கி தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது.

இதேபோன்று கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காவிரி கரையில் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி எழுந்தருள அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kottaiyur Millionaire Temple ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...