×

ஆலத்தூர் தாலுகா மேற்கு எல்லையில் புதிதாக காவல்நிலையம் அமைக்கப்படும்

பெரம்பலூர்,மார்ச் 26: ஆலத்தூர் தாலுகா மேற்கு எல்லையில் புதிதாக காவல்நிலையம் கொண்டு வரப்படும். என்று திமுக வேட்பாளர் பிரபாகரன் உறுதியளித்தார்.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், ஈச்சம்பட்டி, பழைய விராலிபட்டி, புதுவிராலிப்பட்டி, சிறுவயலூர், குரூர், மங்கூன், அடைக்கம்பட்டி, எலந்தளப்பட்டி, டி.களத்தூர், கண்ணப்பாடி, நத்தக்காடு, தேனூர், தொட்டியப்பட்டி ஆகிய கிராமங்களில் திமுக வேட்பாளர் பிரபாகரன் ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தின் போது
ஒவ்வொரு கிராமத்திலும் பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது வேட்பாளர் பிரபாகரன் பேசியதாவது:
திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் நிறை வேற்றப்படும். ஆலத்தூர் தாலுகா மேற்கு எல்லையில் புதிதாக காவல்நிலையம் கொண்டு வரப்படும். இந்த பகுதியில் பொது மக்களின் கோரிக்கையின்படி கழிவுநீர் வாய்க்கால், சிமென்ட் சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன் என தெரிவித்தார்.
பிரசாரத்தின் போது பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சோமு மதியழகன் , காங்கிரஸ் பொறுப்பாளர் தேனூர் கிருஷ்ணன் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Alathur taluka ,
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா