×

அரியலூர் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா

அரியலூர், மார்ச் 26: அரியலூர் மாவட்டத்தில் பெருகி வந்த கொரோனா தொற்று மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக ஒற்றை இலக்கம் வரை பாதிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது பொதுமக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் குறைந்து முக கவசம் அணிவது, தனமனித இடைவெளியினை பின்பற்றுதல், கைகளை நன்றாக கவுழுதல் போன்றவற்றை செய்யாததன் காரணமாக தற்போது படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 4,794 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,713 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பேரும், திருச்சியில் இருவரும், தனியார் மருத்துமனையில் இருவர் பிற மாவட்ட தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 49 பேர் இறந்துள்ளனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் பகுதியில் ஒருவரும், திருமானூர் பகுதியியல் 4 பேரும் செந்துறையில் ஒருவரும், ஜெயங்கொண்டத்தில் ஒருவர், வெளியூரிலிருந்து ஜெயங்கொண்டம், அரியலூருக்கு வந்தவர்களில் இருவர் என 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுகாதாரத் துறையினர் நேற்று ஒரே நாளில் 152 பேருக்கு சளி மற்றும் எச்சில் மாதிரிகளை சேகரித்துள்ளனர். முன்பு 17,928 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...