×

தூத்துக்குடிக்குகப்பலில் வந்த பிலிப்பைன்ஸ் இன்ஜினியருக்கு கொரோனா ஜிஹெச்சில் அனுமதி

தூத்துக்குடி, மார்ச் 26: தூத்துக்குடிக்கு சரக்கு கப்பலில் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல் இன்ஜினியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்காவில் இருந்து சரக்குகள்  ஏற்றிக் கொண்டு எம்எஸ்சி.மிலா3 என்ற கப்பல் 29 மாலுமிகளுடன் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு வந்தது. அந்த கப்பலில் என்ஜினீயராக பணியாற்றி வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹான்பில்லா அன்டணி ஒபிரியானோ (44) என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கப்பலில் இருந்த மற்ற 28 மாலுமிகளுக்கும் கொரோனா அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லை. இதனால் மற்ற மாலுமிகளுடன் கப்பல் புறப்பட அனுமதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,473 ஆக உள்ளது. இதில் 16257 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 73 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 143 பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thoothukudi ,Corona GH ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...