×

கயத்தாறில் இன்று முதல்வர் பழனிசாமி பிரசாரம்

கோவில்பட்டி, மார்ச் 26: கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட அறிக்கை: கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் என்னை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்கு உட்பட்ட கயத்தாறில் பிரதான சாலைபகுதியில் இன்று (26ம் தேதி) இரவு 8 மணிக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். எனவே, பிரசாரத்தில் அதிமுக, பா.ஜ., பா.ம.க., த.மா.கா. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Palanisamy ,Kayathar ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...