×

போடி தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பணியும் செய்யவில்லை ஓபிஎஸ் மீது தங்கத்தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

போடி, மார்ச் 26: போடியில் போடி சட்டமன்ற தொகுதி மற்றும் வடக்கு மாவட்ட அளவிலான திமுக அனைத்து பொறுப்பு ஊழியர் கூட்டம் நடந்தது. அப்போது போடி தொகுதி வேட்பாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான தங்கத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது: நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தை காக்கவும், தமிழர்கள் இழந்த உரிமைகளைமீட்டெடுக்கும் ேதர்தலாகும்.போடி சட்டமன்றத் தொகுதியில் 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எந்தப் பணிகளையும் செய்யாமல் பொதுமக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். பணத்தை கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவில் மிதக்கிறார். அவர் எங்கு என்றாலும் பொதுமக்கள் எதிர்ப்பு பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. எனவே, வெற்றிக்கனியை பறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காலடியில் சமர்பிப்போம் என்று கூறினார். இக்கூட்டத்தில் போடி முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், நகர செயலாளர் மாவீ செல்வராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Thangathamilselvan ,OPS ,Bodi ,
× RELATED காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை: போடியில் 6 கடைகளுக்கு அபராதம்