×

பறக்கும் படை சோதனையில் ₹3.24 லட்சம் பறிமுதல் திருவண்ணாமலை, வந்தவாசி அருகே

திருவண்ணாமலை, மார்ச் 25: திருவண்ணாமலை, வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் ₹3.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவண்ணாமலை- மணலூர்பேட்டை சாலையில், கீழ்கச்சிராப்பட்டு அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தவழியாக வந்த வேளையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் என்பவரின் பைக்கில் இருந்த ₹2.60 லட்சத்தை, நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள வங்கியில் கடன் (பர்சனல் லோன்) பெற்ற தொகையை எடுத்துச் செல்வதாகவும், வங்கிக்கணக்கு புத்தகத்தில் கடன் தொகை வரவு வைத்த விபரத்தை எடுத்து வந்து கொடுப்பதாகவும் முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் கூறினார்.ஆனாலும், பறிமுதல் செய்தபோது ஆவணம் இல்லாததால், ₹2.60 லட்சத்தை திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேல் முன்னிலையில் நிலை கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.

வந்தவாசி:
வந்தவாசி தொகுதி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் அற்புதம் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் தியாகச்செம்மல் மற்றும் போலீசார் நேற்று மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை கீழ்கொடுங்காலூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, கீழ்கொடுங்காலூரில் இருந்து மருதாடு நோக்கி சென்ற பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமின்றி ₹64 ஆயிரம் எடுத்து சென்றது தெரியவந்தது. விசாரணையில், பைக்கில் வந்தவர் கல்லுகொல்லமேடு கிராமத்தை சேர்ந்த நரசிம்மன்(28) என்பது தெரிந்தது.இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை தாசில்தார் அற்புதம் அந்த பணத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாலட்சுமியிடம் ஒப்படைத்தார். அப்போது, தாசில்தார் திருநாவுக்கரசு, வருவாய் ஆய்வாளர்கள் ரஞ்சித், ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Thiruvannamalai, Vandavasi ,
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்