×

சீரமைப்பு பணிகளுக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்

ஈரோடு, மார்ச் 24:   காலிங்கராயன் பாசன வாய்க்காலில் ரூ.76 கோடியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பபட உள்ளதால், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து வரும் பவானி ஆற்று நீரை, பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டில் தேக்கி, காலிங்கராயன் பாசன வாய்க்காலாக ஈரோடு, சாவடிபாளையம், ஊஞ்சலூர், கொடுமுடி ஆவுடையார்பாறை வரை செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் மூலமாக 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில், காலிங்கராயன் வாய்க்காலை மேம்படுத்தவும், சீரமைப்பு பணிகளை செய்யவும் அரசு ரூ.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிகளுக்காக காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், தற்போது காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் முற்றிலும் நின்று, சேறும், சகதியுமாக காணப்படுகிறது.  இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக கடந்த 67 நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலின் இருபுறமும் உள்ள கரைகளை பலப்படுத்தவும், பழுதான மதகுகளை சீரமைக்கவும், தூர்ந்து போன பாலங்களை புதிதாக கட்டவும் ரூ.76 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவாக முடித்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kalingarayan ,
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...