×

பாலக்கோடு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை

பாலக்கோடு, மார்ச் 24: திமுக ஆட்சி அமைந்தவுடன் பாலக்கோடு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் பி.கே.முருகன் உறுதி அளித்தார். பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.முருகன் திம்மம்பட்டி, ஜெர்தலாவ், சர்க்கரை ஆலை, கடமடை, கணபதி, வாழைத்தோட்டம், கோடியூர், காவாப்பட்டி, புதூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கிராமப்புறங்களில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக வேட்பாளர் பி.கே.முருகன் விவசாயிகளிடம் கூறுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன், முடங்கி கிடக்கும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுப்பேன். ஜெர்த்தலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களையும், மக்களிடம் சரியான முறையில் கொண்டு போய் சேர்ப்பேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குட்டி கவுண்டர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, வக்கீல் மணி, மாதேஷ், ராஜகுமாரி மணிவண்ணன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், கந்தசாமி, பொது குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, துணை அமைப்பாளர் குமார், விவசாய தொழிலாளர் அணி முருகன், மாவட்ட பிரதிநிதி முருகன், ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம், இளைஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், காங்கிரஸ் தலைவர்கள் ஜனகராஜ், ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ராஜகோபால், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் பட்டாபி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Palakkad ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது