×

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிவு

கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம், கடந்த பிப்ரவரி 1ம் தேதி 50.35 அடியாக இருந்தது. நீர்வரத்து விநாடிக்கு 38 கனஅடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து 162 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், மறுநாள் (2ம் தேதி) முதல் 21ம் தேதி வரை 20 நாட்களுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், பிப்ரவரி 22ம் தேதி அணைக்கு நீர்வரத்து 162 கன அடியாக இருந்தது. அப்போது, அணையின் நீர்மட்டம் 47.35 அடியாக இருந்தது. பின்னர், பிப்ரவரி28ம் தேதி நீர்வரத்து 55 கன அடியாக குறைந்த நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முழுவதும் நின்றது. மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருவதாலும், அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும், அணையின் நீர்மட்டம் நேற்று 43.65 அடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால் மூலம் 149 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீர் குறைந்து வருவதால், மீன் குத்தகை ஏலம் எடுத்தவர்கள் தற்போது மீன் பிடித்து வருகின்றனர். அதே வேளையில், நீர் திறக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Kṛṣṇakiri dam ,
× RELATED கிருஷ்ணகிரி அணை மதகு அருகில்...