×

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா கிராமம், கிராமமாக பிரசாரம்

ஓட்டப்பிடாரம், மார்ச் 23: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா தூத்துக்குடி மத்திய ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா, நேற்று மாலை  தூத்துக்குடி மத்திய ஒன்றிய பகுதிகளான  கூட்டுடன்காடு, சேர்வைகாரன்மடம், குலையன்கரிசல், கூட்டாம்புளி மறவன்மடம், கோரம்பள்ளம், பெரியநாயகபுரம், காலாங்கரை  ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது  திரண்டிருந்த வாக்காளர்களிடம் சண்முகையா பேசுகையில், ‘உங்களின் அமோக ஆதரவால் நான் வெற்றி பெற்றதும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பஸ் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்றார். வேட்பாளருடன் தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய துணைத் தலைவர்கள் ஏஞ்சலின், ஜெனிட்டா ஜெயராஜ், ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதிகள்  நாகராஜன், வெயில்ராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு செயலாளர் ராஜா ஸ்டாலின், பஞ்.  தலைவர்கள் கூட்டுடன்காடு  ஹரி பாலகிருஷ்ணன், சேர்வைகாரன்மடம் ஜெபக்கனி ஞானசேகர், மறவன் மடம் லில்லிமலர்,   கொடியன்குளம்  அருண்குமார், சேர்வைக்காரன் மடம் துணை தலைவர்  ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் கிளை செயலாளர்கள் மைக்கேல் ராஜ், சுகுமார் மங்களபாண்டி தனசேகர் ஜெயராஜ், பால்ராஜ், மரியதாசன், சுடலைமணி, மணிகண்டன், ஹரி பாலகிருஷ்ணன், கணபதி, சீனிவாசகம், பாலமுருகன், அழகு ஸ்டாலின் ஆகியோர் உடன் சென்றனர்.

Tags : DMK ,Shanmugaiya ,Ottapidaram ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்