ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி

ஜெயங்கொண்டம், மார்ச் 23: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கடைபிடிக்கும் செயல்கள் என்னென்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு இயந்திரத்தை திறந்து முகவரின் முன்பாக மாதிரி வாக்குப்பதிவு செய்வது. பின்னர் அதை அழித்து இயந்திரத்தை சீல் வைப்பது. வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகளை அளிப்பது. அவர்கள் கையில் மை இடுவது. கையெழுத்து வாங்குவது, வாக்குச்சாவடியில் ஒருவரின் பெயரில் முன்னதாகவே ஒருவர் வாக்களித்து சென்றபின் அந்த ஒருவருக்கு வாக்களிக்க அனுமதி அளிப்பது எவ்வாறு போன்ற விதிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்காளர் வாக்குச்சாவடியில் கையெழுத்திட்டு வாக்குச்சீட்டை பெற்றபின் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் செய்வது என்ன, மேலும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று இந்த சின்னத்திற்கு வாக்களிக்க போகிறேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்தால் அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுப்பது போன்றவற்றை பற்றி பயிற்சி அளித்தனர். பயிற்சியை மண்டல அலுவலர்கள் பஞ்சாபிகேசன் மற்றும் சுகந்தி ஆகியோர் அளித்தனர். பயிற்சியின்போது தேர்தல் மேலிட பார்வையாளர் சத்தியபாமா பயிற்சியை ஆய்வு செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>