×

திமுக வேட்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு காவேரிப்பட்டணம்,

மார்ச் 21:கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக செங்குட்டுவன் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட மலையாண்டஅள்ளி, திம்மாபுரம், சுண்டேகுப்பம், கால்வேஅள்ளி, குண்டலப்படடி, தாசம்பட்டி, சாப்பரம், மோரனஅள்ளி, குட்டப்பட்டி, கரடிஅள்ளி, பெரியவேடனூர், தேர்வமுக்குளம், ஜெகதாப், பையூர், சந்தாபுரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, கருக்கன்சாவடி, சவுளூர், சவுட்டஅள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு மேள தாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களிடையே, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விளக்கி பேசினார். ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, நகர செயலாளர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஒன்றிய துணைத்தலைவர் சசிகலா தசரா, வக்கீல் விஸ்வபாரதி, மாவட்ட இளைஞர் துணை செயலாளர் செந்தில்குமார், ஆதி மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆனந்தன், செந்தாமரை தமிழரசன், ரோசா காளியப்பன், காவேரி, சரவணன் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : DMK ,Senkuttuvan ,MLA ,Kaveripattinam ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்