×

கன்னியாகுமரி மக்களவை தொகுதி: விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட 13 பேர் வேட்புமனுக்கள் ஏற்பு

நாகர்கோவில், மார்ச் 21: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த விஜய்வசந்த் (காங்), பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ) உட்பட 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தேர்தலுக்கு கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெற்றப்பட்டது. 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் 23 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது விஜய்வசந்த் (காங்), பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ)உட்பட 13 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்டு ஒரே நபர் தாக்கல் செய்திருந்த மனுக்கள் உட்பட 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் சபின் சுயேட்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் போதிய ஆவணங்கள் இணைக்கவில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சபின் மற்றும் பாஜவை சேர்ந்த சிலர் கலெக்டர் அலுவலகம் வந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மனுவை ஏற்றுக்கொள்ளக்கோரி அதிகாரிகளிடம் அவர்கள் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 வேட்பு மனுக்கள்

1. விஜயகுமார் என்ற விஜய்வசந்த் (காங்)
2. பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜ)
3. நாகூர்மீரான் பீர்முகம்மது (சுயே)
4. அனிட்டர் ஆல்வின் (நாம் தமிழர் கட்சி)
5. டென்னிசன் (சுயே)
6. ராஜீவ் (சுயே)
7. சுபா சார்லஸ் (மக்கள் நீதி மய்யம்)
8. தியோடர் சாம் (சுயே)
9. ஹவ்கின்ஸ் (சுயே)
10. ஜெரோம் லூர்து ராஜா (சுயே)
11: பால்ராஜ் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ரெட்ஸ்டார்)
12. ஜூலியஸ் (சுயே)
13. பாலசுப்பிரமணியன் (அகில பாரத இந்து மகா சபா)

Tags : Kanyakumari Lok Sabha ,Vijayvasant ,Pon ,Radhakrishnan ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த...