×

பூதலூர் அருகே மளிகை கடைக்காரரை தாக்கியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 19: பூதலூர் அருகே மளிகைக்கடைகாரரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். பூதலூர் அருகே சொரக்குடிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள்(70). இவர் அதே ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் (17ம் தேதி) இரவு அதே ஊர் காலனித்தெரு சங்கிலிமுத்து மகன் சுதாகர்(42) என்பவர் மது குடிக்கக மற்றும் தண்ணீர் பாட்டில் பணம் தராமல் கொடுக்குமாறு கலியபெருமாளிடம் கேட்டு தகராறு செய்து, தரமறுத்ததால் கலியபெருமாளை கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கலியபெருமாள் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பூதலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் வழக்கு பதிந்து சுதாகரை கைது செய்தனர்.

Tags : Puthalur ,
× RELATED பூதலூரில் முதியவர் பைக்கில் ரூ.1.50லட்சம் திருட்டு