வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ., வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 18: வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ., நேற்று சூளகுண்டா, கொப்பக்கரை, சஜ்ஜல்பட்டி, பிள்ளையார் அக்ரஹாரம், கருக்கனஹள்ளி, தொட்டமெட்டரை, ஊடேதுர்க்கம், நாகமங்கலம், உள்ளுகுறுக்கை, தொட்டதிம்மனஹள்ளி, ராயக்கோட்டை ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘10 ஆண்டு காலம் இருளில் மூழ்கியுள்ள நாம் அனைவரும் வளமுடன் வாழ, வரும் சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற உடன், நமக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தயாராக உள்ளார். என்னை வெற்றிப்பெற செய்வதன் மூலம் அனைத்து அரசு திட்டங்களும் உங்களை வந்து சேரும்,’ என்றார். ப்போது, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சின்னராஜ், ராயக்கோட்டை நகர செயலாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், அணிகளின் அமைப்பாளர்கள் சதாசிவம், சிவக்குமார், சந்திரன், குமரேசன், பெரியசாமி, கிருஷ்ணன், மாரிமுத்து, கனகராஜ், கோவிந்தன், கணேசன், பெரியண்ணன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: