×

ஓனாங்குடி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருமயம், மார்ச் 18: அரிமளம் அருகே ஓனாங்குடி முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் ஓனாங்குடி, சத்திரம் சீகம்பட்டி, மரமடக்கி, வாண்டாகோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட வாகனத்தில் பூக்கள் எடுத்து வந்தனர். விடிய விடிய பூத்தட்டுகள் வந்தன. அவை அம்மன் சன்னதியில் பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டது. அதிகாலை அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டனர். பிரார்த்தனை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Onangudi Mariamman Temple ,
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...