×

கு.ப.கிருஷ்ணனிடம் வாழ்த்து தீவிர வாகன சோதனையில் பீடி விற்ற ரூ.1.18 லட்சம் பறிமுதல்

திருச்சி , மார்ச் 18: திருச்சி - கரூர் ரோடு குடமுருட்டி காவல் சோதனை சாவடியில் தாசில்தார் சுமதி தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே திருச்சியில் இருந்து குளித்தலைக்கு பீடி பண்டல் ஏற்றி சென்ற விற்பனை பணம் ரூ.1.18 லட்சம் ரொக்கம் இருந்ததும் தெரியவந்தது. பணத்திற்கு போதிய ஆவணம் இல்லாததால் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அதனை டவுன்ஹால் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்
மற்றொரு சம்பவம்: திருச்சி கோட்டை இ.பி ரோடு பகுதியில் நேற்று இரவு சோதனை நடந்தது. அப்போது அவ்வழியே வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, 140 அதிமுக கரை வேட்டி மற்றும் 12 கட்டு துண்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. பறிமுதல் செய்த வேட்டி, துண்டுகள் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Beaty ,
× RELATED பீடி, கட்டுமான தொழிலாளர்களுக்கு...