×

மனநலம் பாதித்த 3 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு

அரூர், மார்ச் 18: அரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த மூன்று பேரை தன்னார்வலர்கள் மீட்டு, மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். அரூர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்டும், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையிலும், சுற்றித் திரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஆடைகள் கிழிந்து, அலங்கோலமான நிலையில் உலா வருவதால், அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் தர்மபுரி மீட்பு அறக்கட்டளையை சேர்ந்த பாலா, தர்மபுரி ஆயுதப்படை எஸ்ஐ பிரபு, அழகு அரூர் காப்போம் அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து, அரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த மூன்று நபர்களை மீட்டு, விழுப்புரத்தில் உள்ள அன்பு ஜோதி மனநலம் காப்பகத்தில் சேர்த்தனர். இதற்கான பரிந்துரை கடிதத்தை அரூர் டிஎஸ்பி தமிழ்மணி வழங்கினார். தன்னார்வலர்களின் இச்செயலை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா