×

வங்கிகள் 2வது நாளாக ஸ்டிரைக் மாவட்டத்தில் ரூ.1200 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஈரோடு, மார்ச் 17:    ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் ரூ.1,200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், ஐ.டி.பி.ஐ.யை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்தும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் சார்பில், நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. இதில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட 217 வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 1,900பேர் போராட்டத்தில் பங்கேற்றதால், வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில் சுமார் ரூ.1,200 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : District of Stirke ,
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது