×

மதுபானக்கடைகளை தனியார்வசம் ஒப்படைப்பது நிர்வாக திறமையின்மை: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு

சென்னை: மதுபானக்கடைகளை தனியார்வசம் ஒப்படைப் பது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துகிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மதுபானக்கடைகளை படிப்படியாக மூட வேண்டிய அரசு, மதுபானக்கடைகளை தனியார் வசம் ஒப்படைக்க முற்படுவது அதன் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகள் தனியார் மயமாக்கப்பட்டால், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கடைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் அபாயமும் எழுந்துள்ளது. எனவே, இந்த முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : TTV Dinakaran ,Chennai ,TTV ,Dinakaran ,AMMK ,General Secretary ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து