மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல்

திருவில்லிபுத்தூர், மார்ச் 17: திருவில்லிபுத்தூர் அருகே, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இளைஞர்கள் நேற்று இரவு திடீரென மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவில்லிபுத்தூர் அருகே, கோட்டைப்பட்டி கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று இரவு திடீரென மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.  ஏற்கனவே, இந்த பகுதி இளைஞர்கள் சில தினங்களுக்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>