செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் படம் உண்டு...

செங்கம், மார்ச் 16: செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க உறுதிமொழி ஏற்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரும்பட்டம் கிராமத்தில் நேற்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேர்தலில் தக்க பாடம் புகட்டவும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செங்கம் தாலுகாவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 வழிச்சாலையால் விவசாய விளை நிலங்கள், பயிர்கள், கிணறு, குளம், குட்டை, ஆறு, ஏரி, பாலம் என பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்தும் விதமாக திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க பிரசாரம் செய்வது, துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு தெரிவிப்பது என தீர்மானித்தனர். இதைத்தொடர்ந்து திமுகவின் கூட்டணிக்கட்சியினருக்கு வாக்கு சேகரித்து வெற்றி பெற செய்வதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Related Stories:

>