×

நீட் முறைகேடு: தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்ய பெ.சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை: தர்மேந்திர பிரதான் எனும் ஒரு அமைச்சரை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்துவது, இணையதள இணைப்பைத் துண்டிப்பது, மெட்ரோ ரயில் நிலையங்களை மூடுவது எனத் வேண்டாத வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

தர்மேந்திர பிரதான் என்கிற ஓர் அமைச்சரை நீக்குவதால் உங்கள் அரசு கவிழ்ந்துவிட போகிறதா என்ன? “உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும்” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. நீட் தேர்வு குளறுபடிகளுக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்கும் காரணமானவர் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். எனவே, தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்கிப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர முடிவெடுங்கள் பிரதமரே! இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : P. Shanmugam ,Dharmendra Pradhan ,Chennai ,Marxist ,State Secretary ,X ,-Sala ,Modi ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து