×

நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையிடம் ரூ.1.04 கோடி சிக்கியது

ஊட்டி, மார்ச் 15: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறியதாக இதுவரை ரூ.1.04 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், உரிய ஆவணங்கள் சமர்பித்த 54 பேருக்கு ரூ.82.59 லட்சம் திரும்ப வழங்கப்பட்டது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுவதையொட்டி கடந்த மாதம் 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் நீலகிாி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு, தலா 3 என மொத்தம் 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 35 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குழுவினர் நேற்று 3 தொகுதியிலும் பணம் எதுவும் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 16 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 71 பேரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்து 85 ஆயிரத்து 800 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 54 பேருக்கு ரூ.82 லட்சத்து 59 ஆயிரத்து 200 திரும்ப வழங்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளிலும் சேர்ந்து நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சத்து 47 ஆயிரத்து 827 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Tags : Nilgiris Flying Squadron ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையிடம் ரூ.1.77 கோடி சிக்கியது