×

தேசிய விருது பெற்றவர்களுக்கு பிரேமலதா வாழ்த்து

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: 72வது தேசிய திரைப்பட விருதுகளில் விருது பெற்ற அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய சினிமாவின் பன்முகத் திறமையை உலக அரங்கில் உயர்த்தும் ஒவ்வொரு படைப்பும் நமது கலாசாரத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தொடர்ந்து பல புதிய உச்சங்களைத் தொடட்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Premalatha ,National Award ,Chennai ,DMDK ,General Secretary ,72nd National Film Awards ,
× RELATED தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு