×

தேவர் நினைவிடத்தில் திமுக வேட்பாளர் மரியாதை

கமுதி, மார்ச் 15: கமுதி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திருச்சி திமுக வேட்பாளர் மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய திமுக வேட்பாளருமான தங்கம் தென்னரசு நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. மேலும் அவர் கூறும்போது, திமுகவிற்கு 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆவார். பின்னர் அவர், சொல்லிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவார் என்று கூறினார். இவருடன் திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொண்ணுத்தம்பி, நரிக்குடி ஒன்றிய செயலாளர் போஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், கமுதி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மனோகரன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Thevar Memorial ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி