×

எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கருத்து

 

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள இனாம் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழ்நாடு அரசாங்கம் கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருக்கிறது. இது நான்கு கிராமத்திற்கு என்றாலும், தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற இனாம் நிலங்கள் வசிக்கக்கூடிய, விவசாயம் செய்யக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒரு தனி ஆணையத்தை தமிழ்நாடு அரசாங்கம் அமைக்க வேண்டும். குதிரை பேரம் விவகாரத்தில் மக்களுக்குதான் கோபம் வரவேண்டும். தொகுதி மக்கள் குதிரை பேரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்டாயம் இடம்பெறாது. கிருஷ்ணகிரி மண்ணில் இருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன் நேற்று முன்தினம் கூறியுள்ளார். எதன் அடிப்படையில் கூறினார் என அவரிடம் கேட்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : State ,Shanmugam ,Chennai ,State Secretary ,P. Shanmugam ,Chief Minister ,Vijay ,Secretariat ,Inam ,Karur district ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து