- காங்கிரஸ்
- நெல்லை
- நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ்
- காமராஜ்
- இந்திரா காந்தி
- வன்னார்பேட்டை
- நகராட்சிப்
- ஜனாதிபதி...
நெல்லை: நெல்லை மாநகர் மாவட்ட காங்., சார்பில் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவை ஒட்டி நேற்று வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே காமராஜர் மற்றும் இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் ராமேஸ்வரன் தலைமையில், நெல்லை மக்களவை தொகுதி எம்பி ராபர்ட் புரூஸ் காமராஜர் மற்றும் இந்திரா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர். லஞ்சம், ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும், அதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வும் நடந்தது.
உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரிசையில் நிற்பது தொடர்பாக முன்னாள் மாவட்டத் தலைவர்கள் சங்கரபாண்டியனுக்கும், உமாபதி சிவனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காங்கிரசார் இடையே திடீரென்று தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது சங்கரபாண்டியனும், உமாபதி சிவனும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். கட்சிமூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். இந்நிலையில், இருவருக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பி, உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. இருவரும் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன் ஆஜராகி உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
