×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு வாகன நெருக்கடியால் திணறிய கரூர் மனோரா கார்னர் பகுதி

கரூர், மார்ச் 14: கரூர் மனோகரா கார்னர் பகுதியில் நேற்று வழக்கத்துக்கு அதிகமான அளவில் வாகனங்கள் குறுக்கீடு காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கரூர் மனோகரா கார்னர் பகுதியில் கரூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இதன் வழியாக செல்கிறது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் இதன் வழியாகத்தான் சென்று வருகின்றன.

வாரந்தோறும் சனிக்கிழமை டெக்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பளநாள் என்பதால் வழக்கமான நாட்களை விட இந்த நாளில் அதிகளவு போக்குவரத்து நடைபெறும். இதற்கிடையே தேர்தல் பிரசாரம் காரணமாக பல்வேறு கட்சியினர்களும் தங்களின் ஆதரவாளர்களுடன் மனோகரா கார்னர் வழியாக சென்று வருகின்றனர்.இதுபோன்ற காரணங்களால் நேற்று வழக்கத்தை விட அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே தான் இந்த பகுதியை கடந்து வேறு பகுதிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karur ,Manora Corner ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது