×

பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மகா சண்டியாக பெருவிழா

அரியலூர், மார்ச் 14: பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோயிலில் மாசி மாத அமாவாசை முன்னிட்டு மகாசண்டி யாகம் நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியிலுள்ள மகா பிரத்தியங்கார தேவிக்கு அமாவாசை தினத்தன்று மிளகாய் சண்டியாகம் பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்த மாசிமாத அமாவாசையை முன்னிட்டு பிரமாண்டமாய் சண்டி யாகம் நேற்று நடைபெற்றது. யாகத்தில் 108 புடவைகளை யாகத்தில் போட்டனர்.

மேலும் மிளகாய் சண்டியாகத்தில் மூட்டை மூட்டையாய் மிளகாய் யாகத்தில் கொட்டினர். மேலும் மஞ்சள் குங்குமம் முக்கணிகளான மா, பலா, வாழை மற்றும் சேலை, கரும்பு, முந்திரி, வெட்டி வேர், கிராம்பு ஜாதிக்காய்,பச்சை கற்பூரம், பேரிச்சை, மாதுளை, திராட்சை, உள்ளிட்ட பழங்களும், வேர்களும் யாகத்தில் கொட்டினர்.மேலும் இந்த மாத யாகத்தில் சேலைகளை இட்டு பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் கட்டப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Maha Chandi festival ,Poyyathanallur Chamundeeswari temple ,
× RELATED வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு:...