- அண்ணாமலை
- எம்.கே. ஸ்டாலின்
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தலைவர்களாகிய நாங்கள்
- பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீ த லீடர்ஸ் அமைப்பின் போதை இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இம்மாநாட்டில் அண்ணாமலை பேசுகையில், ‘‘கல்லூரி மாணவர்கள் ‘டிரக் அம்பாசிடர்’ என்ற டேக் அணிந்து வந்துள்ளனர். இதனை நாம் உருவாக்கவில்லை. இதற்கு முன்பு இருந்த தமிழ்நாடு அரசு (திமுக அரசு) அதாவது கடந்த 2025ம் ஆண்டு இதனை உருவாக்கியது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் 10, 20 பேர் இருக்க வேண்டும், அவங்க ட்ரெயின் ஆகி இருக்கணும், மாணவனுக்கு பிரச்னை இருந்தா அவங்க போய் பேசணும், சின்ன விஷயத்தை கண்டுபிடிச்சா புரோபசர்கிட்ட போய் சொல்லணும், அது பெரிய விஷயமாக மாறும்போது காவல் துறை கிட்ட சொல்லணும்,
தமிழ்நாடு அரசு கல்லூரியில் ‘டிரக் அம்பாசிடர்’ என்ற பொறுப்பை உருவாக்கி இருக்காங்கனு நமக்கு தெரியுமா? இன்னைக்குதான் நாம் அறிமுகப்படுத்துறோம். இந்த மேடையில கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் டிரக் அம்பாசிடர்களாக வந்திருக்கின்றார்கள். நிறைய கல்லூரியில் இதனை ஆரம்பித்த பிறகு, நம்ம பண்றோம், புதுசா எதுவும் பண்ணலை. கடந்த திமுக ஆட்சியில் போதை ஒழிப்பு தூதர்கள் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டார்கள். எனவே இதனை இன்னும் சிறப்பாக, செம்மையாக நாம் எடுத்து செல்ல வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தில் நாம் வந்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். அண்ணாமலை பேசிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி முந்தைய திமுக அரசுக்கு பாராட்டுகள் குவிகிறது.
