×

திருச்சியில் தொடரும் சம்பவம்: போதை ஊசி செலுத்தி 18 வயது இளைஞர் பலி

 

திருச்சி: திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (18). 10ம் வகுப்பு வரை படித்து பாதியில் படிப்பை நிறுத்திய சஞ்சய், வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இவருக்கு போதை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த சஞ்சய், தண்ணீர் குடித்து விட்டு கழிவறை சென்றவர் அங்கேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிந்து போதை ஊசி செலுத்தி கொண்டதால் உயிரிழந்தாரா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதை ஊசி பழக்கத்தால் திருச்சியில் கடந்த மாதம் 8ம்தேதி 18வயதான இளம்பெண், 30ம்தேதி 22வயதான வாலிபர் உயிரிழந்த நிலையில் 3வதாக 18வயது சிறுவன் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Trichy ,Sanjay ,Kallangadu ,Puttur, Trichy ,
× RELATED திருவள்ளூரில் பாய்லர் வெடித்து...