×

மருத்துவக் கல்வி பலரின் கனவாக உள்ளது ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைக்கிறது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு

சென்னை: ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் ஆகியோர் நேற்று மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மேலும் டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் கனவு, லட்சியம்.

மருத்துவக் கல்வி பலரின் கனவாக உள்ளது. ஏழை, எளிய மக்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு சிதைத்து வருகிறது. இதை நம்முடைய அரசு எதிர்கிறது. அதேபோன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறும்பொழுது கல்லூரிகள் இட ஒதுக்கீட்டையோ அல்லது கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டையோ பின்பற்றுவதில்லை. இதனை எதிர்த்து இந்த அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. இவ்வாறு பேசினார்.

Tags : NEET ,Public Welfare ,Minister ,Arunraj ,Chennai ,Tamil Nadu ,Legislative ,Assembly ,Speaker ,J.C.T. Prabhakar ,Minister of Medicine, Medical Education ,Arun Raj ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து